districts

img

‘நாடாளுமன்றத்தின் எனது அனுபவம்’

மதுரை, ஆக.27- சோகோ அறக்கட்டளை யின் ஒரு பிரிவான நீதிபதி  சிவராஜ் பாட்டீல் அகாடமி யின் சார்பில் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், ‘‘எனது நாடா ளுமன்றத்தின் எனது அனு பவம்’’ என்ற தலைப்பில், நாடாளுமன்றத்தில் ஜன நாயகத்தை வலுப்படுத்து வது எவ்வாறு என்று கலந்  துரையாடல் மற்றும் விவாத  நிகழ்ச்சி வி.ஆர்.கிருஷ்ணய் யர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரியினை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆளு மைகள் கலந்து கொண்ட னர். பேரா.விஜயகுமார் வர வேற்று பேசினார். எஸ்.செல்வகோமதி அறிமுக உரையாற்றினார்.  மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்தார். தொடர்ந்து நாடா ளுமன்றத்தின் அனுபவம் மற்றும் நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை வலுப் படுத்துவது எப்படி என்று பேசினார்.  பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரன் பேசி னார். மூத்த பத்திரிகையாளர் எஸ்.அண்ணாமலை நன்றி கூறினார்.