districts

img

முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆய்வு

தேனி, மே. 27- முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரளா தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை குறித்த வழக்கில் தமிழகம் சார்பாக உச்சநீமன்றத்தில் வாதிடும் வழக்கறிஞர்களான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கிருஷணமூர்த்தி, சீனியர் அட்வகேட் உமாபதி, அட்வகேட் ஆன் ரெக்கார்டு குமணன், காவிரி தொழில்நுட்ப குழும துணைத்தலைவர் செல்வராஜ் கொண்ட குழுவினர் பெரியாறு அணைக்குச் சென்றனர். தமிழக பொதுப்பணித்துறையினரின் படகில் தேக்கடி படகுத்துறையிலிருந்து அணைக்குச் சென்ற இக்குழுவினர் பெரியாறு மெயின் அணை, பேபிஅணை, மதகுப்பகுதி வள்ளக்கடவு வனப்பாதை பகுதியை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பெரியாறு அணை சிறப்புக்கோட்ட செயற்பொறியாளர் சாமி இர்வின், உதவிப்பொறியாளர்கள் குமார், இராஜகோபால், பரதன் உடனிருந்தனர்.

;