கடமலைக்குண்டு, ஏப்.9- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்களில் கொட்டை முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் போதுமான அளவில் மழை இல் லாததால் கொட்டை முந்திரியின் உற்பத்தி மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. இதே போல கொட்டை முந்திரியின் விலையும் சந்தையில் 90 முதல்100 வரை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. உற்பத்தி மற்றும் விலை இரண்டுமே குறைந்துள்ள தால் இந்த ஆண்டு கொட்டை முந்திரி விவ சாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற் பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் கூறுகை யில், கொட்டை முந்திரி மரங்கள் உற்பத்தி யாகும் நேரத்தில் கடமலை-மயிலை ஒன்றி யத்தில் போதுமான அளவில் மழை இல்லை. மேலும் சில மரங்களுக்கு கருகல் நோய் ஏற்பட்டதால் உற்பத்தி கடுமையாக பாதிக் கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. எனவே தொடர்ந்து 3 ஆண்டுகளாக நஷ் டத்தை மட்டுமே சந்தித்து வரும் கொட்டை முந்திரி விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவா ரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.