districts

img

வருசநாடு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இணைந்து செயல்பட வேண்டும்

தேனி ,மே.20- வருசநாடு மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க கட்சி பாகுபாடின்றி இணைந்து செய்யப்பட வேண்டும் என அதிமுக வை சேர்ந்த தேனி மக்களவை  உறுப்பினர் ரவீந்திரநாத் திற்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் வேண்டுகோள் விடுத்துள் ளார். தேனி மாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கண்காணிப் புக்குழு தலைவரும்  தேனி மக்களவை உறுப்பினரு மான ப.ரவீந்திரநாத் தலை மையில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் முன்னி லையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராம கிருஷ்ணன், ஆ .மகாரா ஜன், கே.எஸ்.சரவணக் குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் க.பிரிதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் தேசிய சமூக உத வித் திட்டம், தேசிய நில அளவை ஆவணங்கள் நவீன மயமாக்கல் திட்டம்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஊரக குடிநீர் வழங்கல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசின் திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.  கூட்டத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார், ஆ.மகாராஜன் ஆகியோர் நிலை அளவைத்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி பேசியதோடு, பொது மக்களை அலைக் கழிக்க கூடாது என வலி யுறுத்தினர். வருசநாடு மக்களை வெளியேற்றும் விவகாரத் தில் அந்த மக்கள் சட்டமன்ற உறுப்பினராக எனக்கும், மக்களவை  உறுப்பினர் ரவீந் திரநாத்திற்கும் வாக்களித் துள்ளனர். நான் இது குறித்து சட்டமன்றத்தில் பேசி விட்டேன். ரவீந்திரநாத் மக்க ளவையில் பேசி வருசநாடு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண் டும் என்றார். தேனி மாவட்டத்தில் ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை களையும் முழுமையாக நிறைவேற்ற ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட துறை செய லாளர்களிடம் பரிந்துரை செய்து, தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத்தருவதற்கு தேவை யான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர் கள் முனைப்போடு செயல் பட வேண்டும். என கண்கா ணிப்பு குழு தலைவர் ரவீந்திர நாத் தெரிவித்தார்.