மதுரை, செப்.5- மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. 1635-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஏறக் குறைய 400 ஆண்டுகள் பழமையான மது ரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹா லில் பெரிய அளவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 375 ஆண்டுகள் கடந்தும், திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு மதுரை மஹால் சான்றாக உள்ளது. ஒரு தனியார் ஒப்பந்ததாரர் பாரம்பரிய கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்யும் பணி யை மேற்கொண்டுள்ளார். 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மாதத்திற்குள் திட்டத்தை முடித்துவிடலாம் என தொல்லி யல் துறை நம்புகிறது. புனரமைப்புப் பணிக்கு ரூ.8 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. நாடகசாலை, பள்ளியறை பாதுகாப்பு, புனரமைப்பு, முகப்பில் வண்ண விளக்கு கள் பொருத்துதல், தரைதளம் சீரமைப்பு போன்ற பணிகள் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரிலி ருந்து கொண்டு வரப்பட்டுள்ள மணல், சுண்ணாம்பு, கடுக்காய் சாறு, பனை வெல் லம் ஆகியவற்றின் கலவை புனரமைப் பிற்காகக் பயன்படுத்தப்படுகிறது. மஹாலின் வெளிப்புறத்தன்மை மாறா மல் அப்படியே மீண்டும் மீட்டெடுப்பதற்குத் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த சுமார் 40 பாரம்பரியம் மிக்க கொத்தனார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பூச்சு வேலைகளுக்குச் சுண்ணாம்பைப் பயன்படுத்துவதில் திறமையானவர்கள். தளப் பொறியாளர் கூறுகையில், ‘கடுக்காய்’, சுண்ணாம்பை இணைக்க உத வுகிறது. இது சுண்ணாம்பின் வலிமையை அதிகரிக்கிறது. பனை வெல்லம் தண்ணீ ரில் சுண்ணாம்பு கரையும் தன்மையை அதி கரிக்கிறது என்றார். பல இடங்களில் உடைந்து கிடக்கும் கல் தரைகளை மாற்றும் பணி திருமலை நாயக்கர் மஹாலை புனரமைப்பதில் முக்கியமான ஒன்றாகும். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறு கையில், ‘‘இந்தப் பணியை முடிக்கத் தான் கூடுதல் காலமாகும். ஏனெனில் ஒரே மாதிரியான மாதிரியான கனிம குணங்கள்-நிறங்களைக் கொண்ட கற்களைத் தேடு வது ஒரு கடினமான காரியம். தமிழ்நாட்டில் உள்ள குவாரிகளில் இருந்து பெறப்பட்ட கற்கள் ஒரே மாதிரியான கனிம குணங்க ளைக் கொண்டதாக இருந்தாலும். நிறத் தில் வித்தியாசம் இருந்தது. இதனால், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள குவா ரிகளிலிருந்தும் இதுபோன்ற கற்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. புனரமைக்கப்படும் இரண்டு அறைகள் அருங்காட்சிக் கூடங்களாக மாற்றப்பட உள்ளது. ஒரு காலத்தில் மன்னர்களால் இவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்குவதோடு பல்வேறு சிற்பங்கள், கலைப்பொருட்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட உள்ளது.