districts

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

சின்னாளபட்டி, ஜூன் 4- திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவ குருசாமி தலைமையில் நடைபெற்றது.  ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) வேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி  அலுவலர் திருமலைசாமி வரவேற்று பேசினார்.  கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வாகனங்களின் எரி பொருள் செலவு, கணினி பழுதுநீக்கும் செலவு, கிராம ஊராட்சிகளுக்கு சுகாதார பொருட்கள் வழங்கிய செலவு  மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிக்காக நியமிக்கப்  பட்ட 20 மஸ்தூர் கூலியாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.427  வீதம் 540 நபர்களுக்கு ரூ.2லட்சத்து 30 ஆயித்து 580 ரூபாய் வழங்குதல், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் உட்பட 2பேரூராட்சிகளில் உள்ள சத்துணவு மையங்களில் வைப்ப றையுடன் கூடிய புதிய சமையலறை கட்டுவதற்கு ரூ.29 லட்சத்து 72ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தல் உட்பட 20 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 196 மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் ,15 தரைதள தொட்டிகள் கட்டு வதற்கு ரூ.213.99கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரை பாராட்டி ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி கொண்டுவந்த சிறப்பு  தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.  வட்டார வளர்ச்சி அலுவ லர் திருமலைசாமி நன்றி கூறினார்.

;