திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அனைத்து வங்கிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும். நிபந்தனையற்ற வங்கிக்கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆறுமுக வள்ளி தலைமை தாங்கினார். சிஐடியு ஒன்றிய கன்வீனர் வி.கே.முருகன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சூசைமேரி ஆகியோர் ஆதரித்துப் பேசினர். 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.