districts

img

தேனியில் ரமலான் விருந்து

தேனி, ஏப்.30- ஜமாத்தை இஸ்லாமி ஹிந்த் தேனி கிளையின் சார்  பில் ரமலான் சந்திப்பு (விருந்து நிகழ்வு) நடைபெற்றது . தேனி நேசம் மக்கள் சேவை மையத்தில் ரமலான் சந்திப்பு நிகழ்விற்கு வந்தி ருந்த விருந்தினர்களை  ஜா.இ.ஹி.தேனி  கிளை தலைவர் அபுதாகிர் ராஜா வரவேற்று  பேசினார் .மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, சிபிஎம் முன்னாள் மாவட்ட செயலாளர் டி .வெங்கடே சன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி செய லாளர் தமிழ்வாணன், ஜெய்  பீம் புரட்சி புலிகள் தலைவர்  அருந்தமிழர் அரசு, ஆதித்  தமிழர் பேரவை மாவட்ட தலைவர் சுரேஷ், எழுத்தா ளர் ஜோதி பாரதி, சமூக நல்லிணக்க பேரவை கௌரவ தலைவர் பேராசிரி யர் முனைவர் ஜோசப் சேவி யர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.