districts

img

நிலக்கோட்டை, சின்னாளப்பட்டியில் மழை

சின்னாளப்பட்டி, செப்.19- திண்டுக்கல் மாவட் டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாயன்று காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்த  நிலையில் மாலை திடீரென கூடிய கருமேகங்கள் சூழ்ந்து  சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.  இதனால் கொடைரோடு, காமலாபுரம், மைக்கேல் பாளையம், விளாம்பட்டி, பள்ளப்பட்டி, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி யது. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பகுதியில் மழை  பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல், சின்னாளப்பட்டி, காந்திகிரா மம், அம்பாத்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.