districts

img

ரயில்வே ராமசாமி துணைவியார் ஆர்.இராஜம்மாள் காலமானார்

மதுரை, மே 9- தமிழகம் முழுவதும் உள்ள ரயில்வே தொழிலாளர்களால் ரயில்வே ராமசாமி என  அழைக்கப்பட்ட ராமசாமியின் துணைவி யார் ஆர்.இராஜம்மாள் மதுரையில் திங்க ளன்று காலை காலமானார். அவருக்கு வயது 96.  மறைந்த ஆர்.இராஜம்மமாள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஆர்.ரெங்கராமானுஜம் அவர்களின் தாயார் ஆவார். அன்னாரது மறைவுச்செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்  டச் செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராதா, வடக்கு இரண்டாம் பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ திய சங்க மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்  சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதி யர் சங்க மாநில கௌரவத் தலைவர் பர மேஸ்வரன், நாராயணன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், டிஆர்இயு, அகில  இந்திய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்களன்று மாலை மதுரை தபால் தந்தி நகர் வள்ளுவர் காலனி அருகில் உள்ள கலைநகர் நான்காவது தெரு வில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்  றது.