districts

img

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி: தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் சாதனை

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி:  தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் சாதனைதூத்துக்குடி, ஆக. 30 மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லுலூரியை சேர்ந்த மாணவிகள் இரண்டாவது இடம் பிடித்து  சாதனை  படைத்துள்ளனர். சேலத்தில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி உள்ள ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆக. 24,25,26 தேதிகளில் நடைபெற்றது. இதில், 19 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியருக்கும், 45 வயதுக்குட்பட்ட ஜூனியர் ஆண்கள், 32 வயதுக்குட்பட்ட ஜூனியர் பெண்கள், 25 வயதுக்குட்பட்ட சீனியர் ஆண்கள், 39 வயதுக்குட்பட்ட சீனியர் பெண்கள் என ஆண்கள் - பெண்களுக்கு 10 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.  இப்போட்டியில் சேலம், சென்னை, தூத்துக்குடி, திருவள்ளுர், கோவை, மதுரை, திருவாரூ ர்உட்பட பல மாவட்டங்களில் 90 ஆண்களும், 110 பெண்களும் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியை சேர்ந்த 10க்கு மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.  இதில் அனீ 45 கிலோ  (சீனியர்) பிரிவில் 3ஆம் இடத்தையும், 49 கிலோ  (சீனியர்) பிரிவில் மரிய அசிந்தா 3ஆம் இடத்தையும், 55கிலோ (ஜூனியர்) பிரிவில் ரசிமா பவானி முதலாம் இடத்தையும், சீனியர் பிரிவில் 2ஆம் இடத்தையும், 59   கிலோ பிரிவில் மகாலெட்சுமி (ஜூனியர் மற்றும் சீனியர்) பிரிவில் இரண்டாம் இடத்தையும், 64  கிலோ பிரிவில் ஸ்ரீ மாரி தங்கம் (சிறுமியா) 3ம் இடத்தையும் +87 கிலோ பிரிவில் அக்ஷயா (ஜூனியர் மற்றும் சீனியர்)  2ம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.  இவர்கள் மொத்தம் 232 புள்ளிகளை பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்று மகளிர் ஜூனியர் ரன்னர் கோப்பையை வென்றுள்ளனர்.