districts

img

பணியிடை நீக்கத்தை கண்டித்து பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருநெல்வேலி ,பிப். 8- பாளையங்கோட்டை, தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி நிர்வாகத்தினர், அரசு விதிமுறை களுக்கு எதிராகச் செயலபடுவ தைக் கைவிடக் கோரி, இரண்டு  ஆண்டுகளாக மூட்டா ஆசிரியர் சங்கம் தொடர்ந்து பல போராட் டங்களை முன்னெடுத்து வரு கிறது.  ஆனால், கல்லூரி நிர்வா கத்தினர், தொடர்ந்து பல்வேறு  அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ள னர். அரசு விதிமுறைகளைப் பின்பற்றி, கல்லூரிச் செயல்பாடு கள் இருக்க வேண்டும் என்று  போராடிய, கல்லூரிப் பேராசிரி யர்கள் முனைவர் எஸ். பெஸ்கி ஆன்டனி இராயன் மற்றும் முனைவர் ஜி. சகாய அந்தோணி சேவியர் இருவரையும் கல்லூரி நிர்வாகம்  பணியிடை நீக்கம் செய்துள்ளது. இரண்டு பேராசிரி யர்களின்  பணியிடை நீக்கத்தை  உடனடியாக  ரத்து செய்ய கோரி யும், அரசு விதிமுறைகளைப் பின் பற்றி, கல்லூரி முதல்வரை உடனடியாக நியமனம் செய்ய வலியுறுத்தியும், கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் பணி யில் மூத்த பேராசிரியரை துறைத் தலைவராக நியமிக்கக் கோரி யும், அரசு விதிமுறைப்படி இணை  முதல்வர் மற்றும் தேர்வாணைய ரை நியமிக்க வலியுறுத்தியும் இக்கல்லூரியில் பணியாற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் வளா கத்திற்குள் காத்திருப்புப் போராட் டத்தை நடத்தி வருகின்றனர்.