சிவகங்கை, மார்ச் 1- தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் பிறந்த 5 குழந்தை களுக்கு திமுக நகர செயலாள ரும் 27 ஆவது வார்டு கவுன்சில ருமான துரை ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளரும் ,காஞ்சி ரங்கால் ஊராட்சி மன்ற தலைவரு மான மணிமுத்து ,சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனை முதல்வர் டாக்டர் ரேவதி ஆகியோர் தங்க மோதிரம் வழங்கினர். மேலும் சிவகங்கை நகரில் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது .வள்ளலார் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் மணி முத்து ,நகர்மன்ற உறுப்பினர் அயூப் கான், திமுக ஒன்றிய செய லாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.