districts

மதுரை முக்கிய செய்திகள்

ஓய்வூதியர் வீடுகளுக்கு சென்று ஆயுள் சான்றிதழ் புதுப்பிக்கும் அஞ்சல் காரர்கள்

திருநெல்வேலி, ஜூலை 2- ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக் கும் திட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் பல ஓய்வூதிய தாரர்கள் கைரேகை பதிவு செய்து ஆயுள் சான்று சமர்ப்பித்து உள்ளனர்.  இந்த ஆண்டு தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை அவர்களின் வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை தபால்காரர் கள் மூலம் சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். அதன்படி நெல்லை மாவட்டத்தில் தபால்காரர்கள் மூலம் சம்பந்தப்பட்ட வர்கள் வீடுகளுக்கே சென்று ஆயுள் சான்றிதழை புதுப்பித்து வருகின்றனர்.  பாளை., மகராஜா நகர் தபால் நிலையத்தை சேர்ந்த  தபால் காரர்கள் செல்வ ரத்னம், செல்வம் ஆகியோர் சீனி வாச நகரை சேர்ந்த ஒரு பயனாளி வீட்டிற்கு சென்று அவரிடம் கைரேகை பதிவு செய்த பின்னர் ஆயுள் சான்றிதழை புதுப்பித்தனர்.

முத்தூரில் பிடிபட்ட கரடி களக்காடு பகுதியில் விடப்பட்டது

திருநெல்வேலி, ஜூலை 2- நெல்லை அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் கரடி அட்டகாசம் செய்து வந்தது. அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இதையொட்டி முத்தூரில் சுற்றித்திரிந்த கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இந்த கூண்டில் வெள்ளி யன்று கரடி சிக்கியது. கூண்டில் சிக்கிய கரடியை நெல்லை வனச்சரகர் சரவணகுமார், வனவர் அழகர்சாமி ஆகியோ ரின் தலைமையிலான வனத்துறையை சார்ந்த குழுவும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவும் இணைந்து கரடியை களக்காடு சரணாலயம் முத்தலாறு வனப்பகுதியில் உதவி உயிரின பாதுகாவலர் பயிற்சி  மற்றும் களக்காடு வனப்பணியாளர்களின் முன்னிலை யில் பாதுகாப்பாக விட்டது.

சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி, ஜூலை 2- தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வரு கின்றன. இதனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு நீர்ப்பாசன விவசாயம் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.14 லட்சத்து 84 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தாமிரபரணி உபரி நில பகுதிகளில் 12 ஹெக்டேர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்படவுள்ளது. வெண்டை, தர்பூசணி, மிளகாய், கத்தரி போன்ற காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 5 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ரேஷன் கார்டு நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

சிறுமிகள் பாலியல் பலாத்காரம்:  போக்சோ வழக்கில் 2 பேர் கைது

தூத்துக்குடி, ஜூலை 2- தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 2 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 8-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வெயிலுமுத்து (22).  கட்டுமானத் தொழிலாளியான இவர் 14 வயது சிறுமியை,  அங்குள்ள கோவில் முன்பாக தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்கா ரம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதையறிந்த அந்த பெண்ணின் தாயார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, போக்சோ மற்றும் குழந்தைகள் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வெயிலுமுத்துவை கைது செய்தனர். மற்றொரு சம்பவம் விளாத்திகுளம் அருகேயுள்ள வல்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துபாண்டி (20) என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து முத்துபாண்டியை கைது செய்தனர்.

தூத்துக்குடியில் நகைகள் கொள்ளை

தூத்துக்குடி, ஜூலை 2- தூத்துக்குடி அருகே சத்துணவு ஊழியரின் வீட்டில் 10 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம கும்பல், மற்றொரு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியையும் தாக்கி நகையை பறித்துச் சென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள குமர ரெட்டியாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி மாரியம்மாள் (45). எப்போதும் வென்றான் அரசு பள்ளியில் சத்து ணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் உறவினர் வீட் டிற்கு சென்று விட்டு சனிக்கிழ மையன்று திரும்பி வந்தபோது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.  இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா (74) என்பவர் வெளியூர் சென்றுள்ளார். அவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் அவரது வீட்டில் நகை- பணம் எதுவும் இல்லை என்ப தால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அதே ஊர் தெற்கு தெரு வை சேர்ந்த சண்முகம் என்பவ ரது மனைவி லோகம்மாள் (60) என்பவர் காற்றுக்காக வீட்டின் வளாகத்தில் படுத்து தூங்கி யுள்ளார். 3 பேர் கொண்ட கும்பல் அவரது காதணிகளை பறித்துச் சென்றுள்ளது.  இந்த சம்பவங்கள் தொடர் பாக பசுவந்தனை காவல்துறையி னர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணை யில், ஒரே கும்பல்தான் 3 இடங்க ளிலும் கைவரிசை காட்டியுள்ளது என்பது தெரியவந்தது. காவல் துறையினர் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

தூத்துக்குடி, ஜூலை 2- தூத்துக்குடியில் பாளை., ரோட்டில் ஏவிஎம் மருத்துவமனை அருகில் அரசு ஊழியர் சங்கம் முன்பு உள்ள டிரான்ஸ்பார்மரில் சனிக்கிழமையன்று காலை திடீரென தீப்பொறி கிளம்பி யது. சில நொடிகளில் அது பெரும் தீயாக மாறி, கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. இதனால் அப் பகுதி மக்கள் பீதியடைந்த னர்.  இதையடுத்து மின் வாரிய அலுவலர்கள் மின் இணைப்பை துண்டித்த  பின்னர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத் தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.

பெண்ணிடம் நகை பறிப்பு

திருநெல்வேலி, ஜூலை 2- பாளை தியாகராஜநகர் 8-வது வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவ ரது மனைவி காந்திமதி (58). இவர் சனிக்கிழமையன்று அதிகாலை வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்.  அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென காந்திமதி கழுத்தில் கிடந்த 4 கிராம் நகையை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். ஆனால் அதற் குள் அந்த வாலிபர் தப்பிசென்றார். இதுதொடர் பாக அவர் பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த வாலிபரை தேடி வருகின்றனர்.

பொறியியல் பணி தேர்வு: 57% பேரே எழுதினர்

திருநெல்வேலி, ஜூலை 2- தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியி யல் பணிகளில் அடங்கிய பத விகளுக்கான நேரடி நிய மனம் செய்வதற்கான எழுத்து தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.     நெல்லை, பாளை., வட்டத்தில் உள்ள 17 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வை எழுதுவதற்காக 4,831 பேர் விண்ணப்பித்தி ருந்தனர். தேர்வையொட்டி மையங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் செய்யப்பட்டி ருந்தன.  தேர்வினை 2,752 பேர் மட்டுமே எழுதினர். இது 57 சதவீதம் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 2,079 பேர் தேர்வு எழுத வர வில்லை. தேர்வை கண்கா ணிக்க தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலை யில் 5 சுற்றுக் குழு அலுவ லர்கள் நியமிக்கப்பட்டி ருந்தனர். 

வாலிபர் சங்க கிளை அமைப்பு

தென்காசி, ஜூலை 2-  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா பூலாங் குளத்தில் வாலிபர் சங்க புதிய கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிளைத் தலைவ ராக கே.மேகராஜ், செயலா ளராக எம்.பசுபதி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். மேலும் ஸ்தல பிரச்ச னைகளுக்காக கையெ ழுத்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  நிகழ்வில், மாவட்டப் பொருளாளர் கே.மாடசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கனகராஜ், ஆர்.பாரத்  ஆகியோர் கலந்து கொண்ட னர்.

திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 8-ல் வருஷாபிஷேகம்

தூத்துக்குடி, ஜூலை 2- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆனி வருஷா பிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப் பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8.30 மணிக்கு விமானங்களுக்கு வருஷாபி ஷேகம் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபா ராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷே கம் நடைபெறுகிறது. மாலையில் சுவாமி குமரவிடங்கப் பெருமான் வள்ளி அம்மனுடன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 17-ல் குரூப் 4 மாதிரி தேர்வு: குமரி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

நாகர்கோவில், ஜூலை 2- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள  தொகுதி- IV (குரூப்- IV) போட்டித்  தேர்விற்கு மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்,  நாகர்கோவில் மூல மாக நேரடியாக தெ.தி.இந்து கல்லூரி, நாகர்கோவிலில் ஜூலை 17 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.  இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள வேலை நாடுநர்கள் இந்த மாதிரி தேர்வினை எழுதி பயன் பெறலாம். இந்த இலவச மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள், DECGCNGL GROUP-4 2022 என்ற TELEGRAM CHANNEL-இல் தங்களை இணைத்துக் கொண்டு, அதில் பகிரப்படும் கூகுள் லிங்-இல் தங்களது விவரங்களை 10.07.2022க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த கூகுள் லிங்க்-இல் பதிவு செய்து கொள்ப வர்கள் மட்டுமே மாதிரி தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.  மேலும், இத்தேர்வின்போது பதிவுதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டு நகலினையும், (பாஸ்போர்ட் சைஸ்) புகைப்படத்தினையும் தவறாது எடுத்து கொண்டு காலை 9  மணிக்கு முன்னதாக நாகர்கோவில் தெ.தி இந்து கல்லூரி க்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலை நாடுநர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.

 

;