கன்னியாகுமரி,ஜன.25- கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளு வர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்தியாவின் 73-வது குடியரசு தினவிழா ஜன.26 அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரிக்கும் போலீஸ் பாதுகாப்பு வளை யத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திரு வள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலி லும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. மேலும் கன்னியாகுமரி ரயில் நிலையம், பேருந்து நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப் பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.