districts

img

விவசாயம் பாதிக்கும் அபாயம்

சின்னாளப்பட்டி, மே 31- திண்டுக்கல் மாவட்டம்,கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் உள்ள ஓடையை ஆக்கிரமித்து பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட குப்பைகளை பேரூராட்சி நிர்வா கம் கொட்டி வருகின்றது.  இதனால் ஓடையை காணவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் ஞாயிற்றுக்கிழமையன்று அமைச்சர் களின் வருகையால் பிளாஸ்டிக் கழிவுகள்  மற்றும் குப்பைகள் மீது ஜேசிபி இயந்தி ரம் மூலம் மண்ணை கொட்டி மூடினர்.  இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம்  பாதிக்கும் என்று இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு அமைப்பாளர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓடை யில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்ற  வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,யின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செய லாளர் சக்திவேல் கூறுகையில், மேற்கு  தொடர்ச்சி மலை நாயோடை நீர்த்தேக்கத்தி லிருந்து உற்பத்தியாகி சுமார் 40-அடி அக லம் கொண்ட ஓடை வழியாக, கன்னிவாடி  பேரூராட்சிக்குட்பட்ட நகர் பகுதி வழி யாக பல்வேறு குளங்களை நிரப்பி, குடக னாறில் கலக்கும் இந்த பிரதான நீர்வழி  ஓடையில் கொட்டப்படும் கழிவு குப்பை கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்க வலியுறுத்தி, ஏற்கனவே பல முறை மாவட்ட ஆட்சியருக்கு புகார்  அளித்துள்ளோம்.இதனால், இப்பகுதியில்  நெல், வாழை, கரும்பு, மஞ்சள், மக்காச் சோளம் மற்றும் பருத்தி உள்ளிட்ட விவ சாயங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், 1500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவ சாய பாசனம் வசதி பெறும் நிலங்கள் கடு மையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் வருகையால் கன்னிவாடி பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அவசர அவசரமாக, ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து கொட்டப்பட்டிருந்த, பிளாஸ்டிக் கழிவு கள் மற்றும் குப்பைகளை இரவோடு இர வாக மண்ணை போட்டு அப்படியே மூடி யுள்ளனர். இதனால், இப்பகுதியில் நிலத்  தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கக்கூடும், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.

;