தேனி, மே 26- போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு அகவிலைப்படி, ஓய்வூ திய பலன்களை வழங்க கோரி மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர்கள் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் மே 26 அன்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழக ஓய்வூதி யர்களுக்கு நிலுவையில் உள்ள 77 மாத கால அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் அனைவரையும் தமிழக அரசின் அரசு ஊழியர்களுக் கான மருத்துவக் காப்பீட்டுத் திட் டத்தில் இணைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தேனி ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்டத்தலைவர் சி.பா.ஆண்டவர் தலைமை வகித் தார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத்தலைவர் பா.ராம மூர்த்தி, ஓய்வு பெற்ற பள்ளி கல் லூரி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.பொன்னையா ஆகி யோர் சிறப்புரையாற்றினர் பல் வேறு சங்க நிர்வாகிகள் கே.துரை ராஜ், முத்தையா, பெருமாள்சாமி, எம்.பாலையா ராமசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாவட்டச் செய லாளர் எம்.ராமச்சந்திரன் பேசி னார்.
மதுரை
மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் வி. பிச்சைராஜன் தலைமை வகித் தார். பல்வேறு சங்க நிர்வாகிகள் சி. சந்திரசேகரன், ஆர்.தேவராஜ், அ.பால்முருகன், பி.சுப்பையா, என்.மகாலிங்கம், மா.முருகேசன், எஸ்.பாண்டியன், என்.உத்திர குமார், எம்.பால்ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். மதுரை மாநகர துணை மேயர் டி. நாகராஜன் போராட்டத்தை ஆத ரித்து உரையாற்றினார். ஏ.முரு கேசன் நன்றி கூறினார்.
விருதுநகர்
விருதுநகர் பணிமனை முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.சந்திரராஜன் தலைமை வகித்தார். போக்கு வரத்து ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.போஸ் வரவேற்புரை யாற்றினார். துவக்கி வைத்து சிஐ டியு மண்டல பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத்துரை வேபசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் வி.குருசாமி பேசினார். முடிவில் ஜேசிடியு கன் வீனர் தேனிவசந்தன் கண்டன உரை யாற்றினார். மேலும் இதில் மாவட்ட பொருளாளர் முத்துச்சாமி, சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் நாகல்நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.எம்.ஜெயசீலன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வி.பி.ஆனந் தம் பி.செல்வராஜ், ஆகியோர் விளக்கிப் பேசினர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக மாவட்டத் தலைவர் பி கிருஷ்ணன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் டி ராமச்சந்திர பாபு, மண்டலச் செயலாளர் பவுல் ராஜ் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்ட தலைவர் அய்யாத்துரை மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆர்.குருவேல், மணிக் கண்ணு, பி. சேகர், நஜ்முதீன், எஸ்.ஆர். ராஜன் ஆகியோர் ஆதரித்துப் பேசினர்.