districts

img

பஞ்சபடி, கூலி உயர்வு கோரி முற்றுகைப் போராட்டம்

பீடித் தொழிலாளர் சங்கப் பேரவை முடிவு தென்காசி, ஜுலை 3- தென்காசி மாவட்டம் தென்காசி சிஐடியு பீடித் தொழிலாளர் சங்க  தாலுகா பேரவை கூட்டம் தாலுகா  தலைவர் என்.ஆறுமுகம் தலைமை யில் ஆய்க்குடியில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் எம்.வேல்  முருகன் பேரவையை துவக்கி வைத் தார். சங்கத்தின் ஸ்தாபன வேலை அறிகையை தாலுகா செயலாளர் ஏ. குருசாமி சமர்ப்பித்தார். வரவு - செலவு  அறிக்கையை பொருளாளர் நாகரத்தி னம் சமர்பித்தார். சிஐடியு தலைவர் அய்யப்பன் வாழ்த்தி பேசினார்.  பீடிசங்க தென்காசி தாலுகா தலை வராக ஏ.முத்துலெட்சுமி, செயலாள ராக ஏ.குருசாமி, பொருளாளராக இசக்கிமுத்து மற்றும் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் ஏழு பேர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.  கிங் பீடி கம்பெனி பீடித்தொழிலா ளர்களுக்கு 2 ஆண்டுகளாக லிவு சம்ப ளம், போனஸ் வழங்கவில்லை. எனவே உடனே வழங்க கோரியும், தரமான பீடி இலை 700 கிராம் வழங்கிட கோரியும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 6 மாத கால பிஎப் பணத்தை உடனே திருநெல்வேலிபிஎப் அலுவலகத்தில் செலுத்திட கோரியும், வார, வாரம் பீடி தொழிலாளர் சம்பளத்தை வழங்கிட கோரியும், 2022 ஆண்டு உயர்த்தப்பட்ட பஞ்சபடி மற்றும் கூலிஉயர்வு 1000 பீடிக்கு ரூ 247.81 உடனே வழங்கிட கிங் நிர்வாகம் மீது தமிழக அரசும், தொழிலாளர் துறையும் நடவடிக்கை எடுத்திட கோரி ஜூலை 11 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு பாவூர் சத்திரம் கிங் பீடி கம்பெனி முன்பு கிங் பீடித் தொழிலாளர்கள் முறையீடும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

;