districts

img

தேனியில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மறியல்

தேனி, ஜூன் 6- தேனியில் உள்ள அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் -5 ஆம் வகுப்பு வரை பாடப்  பிரிவு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து குழந்தைகளு டன் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழகத்தில் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்  பள்ளி உள்ளிட்ட 120 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்புகள் வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று பயின்று வந்தனர். எல்.கே.ஜி  முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்க கல்வி இயக்குநர்  கட்டுப்பாட்டில் வருவதால் பயின்று வரும் மாணவர்களை  அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை குழந்தை களை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் வந்தனர். அரசு  உத்தரவை காட்டி, வேறு பள்ளியில் சேர்க்கும் படி ஆசிரி யர்கள் சொல்லியுள்ளனர் .இதனை ஏற்காத பெற்றோர், குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தைக்கு பின்  மறியலை கைவிட்டனர்.

;