பண்ருட்டி செந்தமிழ்ச்சங்கம் மற்றும் அனைத்துலகப் பொங்கு தமிழ்ச்சங்கம் சார்பாக ஹைக்கூ கவிதை நூல் வெளியிடப்பட்டது. இதில் திருவில்லிபுத்தூர் லயன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் மா.சுரேஷ் அவர்களின் கவிதை இடம் பெற்ற நூலுக்கு ஹைக்கூ செம்மல் விருது வழங்கப்பட்டது. மூவி லயன்ஸ் சங்கம், மூவி லயன்ஸ் பள்ளித் தாளாளர் ஆர். வெங்கடாசலபதி, பள்ளி முதல்வர் எம்.பி.முருகன், துணை முதல்வர் பீ. ஜெயராமகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் விருது பெற்ற ஆசிரியர் சுரேசை பாராட்டி, வாழ்த்தினர்.