தேனி ,மே.20- போடி அருகே சிலமலை ஊராட்சியில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலை மையில் ஊராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடைபெற்றது . போடிநாயக்கனூர் ஒன்றியத்திற் குட்பட்ட சிலமலை ஊராட்சியில் ஏராளமா னோர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி யாற்றி வருகின்றனர். இந்த ஊராட்சியில் இவர்கள் அனைவருக்கும் சுழற்சி முறை யில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வேலைக்கு வந்த 30-க்கும் மேற்பட்டோ ருக்கு வேலை வழங்க வில்லை சுழற்சிமுறை யில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை விடுத்து கடந்த வாரம் வேலை செய்தவர்க ளுக்கும், உறவினர்களுக்கும் மட்டுமே மீண்டும் வேலை கொடுப்பதாகவும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்து வருவதாகவும் கூறி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தகவலறிந்து வந்த விவ சாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தங்க பாண்டி ,காமராஜ் ,விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே.பாண்டியன், கிளைச்செயலாளர் பரமய்யா ஆகியோர் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒன்றிய மேற்பார்வை யாளர் பிரதாப் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து வேலை வழங்கப்பட்டது.