இராமநாதபுரம்,ஆக.25- குறைந்தபட்ச பென்ஷன் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். இபிஎஸ் 95 பென்ஷன் தாரர்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தில் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில்வே கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாலை ஓய் வூதியர்களின் உண்ணாவிரத போராட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எம். சிவாஜி துவக்கி வைத்து பேசினார். மின் ஊழியர் ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலா ளர் டி.இராமச்சந்திர பாபு ஆதரித்துப் பேசினார். பஞ்சாலை ஓய்வு பெற்றோர் நலச் சங்க மாவட்ட செயலாளர் எஸ். வெங்கடசுப்பிரமணியன் நிறைவுரை யாற்றினார்.