நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டத்தின் கீழ் திங்களன்று பழனி அரசு மருத்துவமனைக்குள் நெகிழியை (பிளாஸ்டிக்கை) ஒழிக்கும் விதமாக அனைவருக்கும் இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார், சித்த மருத்துவர் மகேந்திரன், மருத்துவர்கள் டால்ஸ்டாய், சதீஸ்பாபு, பழனி மலைக்கோயில் அரிமா சங்கத்தலைவர் முத்துக்குமரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.