districts

img

ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளி சாதனை

சிவகங்கை, மே 8- 12-ஆம் வகுப்பு அரசு  பொதுத் தேர்வில் சிவ கங்கை ஆக்ஸ்போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி தேவ ஏஞ்சல் 594 மதிப்பெண் எடுத்து  மாவட்ட அளவில்  முதன்மை பெற்றுள்ளார். இப்பள்ளியில் தேர்வெழுதிய 101 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 585 மதிப்பெண் பெற்று திவ்யதர்ஷினி பள்ளி அளவில் இரண்டாம் இடம், 583 மதிப்பெண் பெற்று அபினேஷ் ஸ்ரீ பள்ளி அளவில் மூன்றாவது இடம் பெற்றுள்ளார். பள்ளியின் தாளாளர் சியாமளா, முதல்வர் குமாரிபிரானேஷ், மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.