districts

img

பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள்- அதிகாரிகள் வேலைநிறுத்தம்

மதுரை,ஜன.28- ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இமயம் முதல் குமரி வரை உள்ள அரசு டைமை பொது இன்சூரன்ஸ் ஊழி யர்கள் மற்றும் அதிகாரிகள் ஜனவரி 28 அன்று நாடு தழுவிய ஒரு நாள்  வேலைநிறுத்தத்தை மேற்கொண்ட னர். அரசுடைமை பொது இன்சூரன்ஸ் அலுவலகங்கள் வேலைநிறுத்தம் காரணமாக வெறிச்சோடிக் கிடந்தது.  01.08.2017 முதல் அரசுடைமை இன் சூரன்ஸ் ஊழியர்களுக்கும் அதிகாரி களுக்கும் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தம் எழுச்சியோடு நடைபெற்றது. ஒன்றிய அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பேருதவியாக இருந்து வருகின்ற, நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கும் இன்சூரன்சின் பயன்கள் கிடைக்கப் பெறும் வகையில் அலுவலகங்க ளைத் திறந்து பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவையாற்றி வரும்  பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்க ஒன்றிய  அரசு முனைப்பு டன் செயல்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு பேசி வருகின்ற சுயசார்புக் கொள்கைக்கு முரணாக இத்தகைய செயல்பாடுகள் அமைந்துள்ளன என தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய நடவடிக்கைகள் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. தனியார்மய நடவ டிக்கையைக் கண்டித்தும் இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தொழில்களும் நலிவடைந்த சூழலில் அரசுடைமை பொது இன்சூரன்ஸ் நிறு வனங்கள் கடந்த 2021 ஆம் நிதி யாண்டில் 72 ஆயிரம்  கோடி ரூபாய் பிரீமிய வருவாயைத் திரட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 முதல்  2017 வரையிலான கால கட்டத்தில் மத்திய அரசுக்கு பங்கு  ஆதாயமாக ரூ.3 ஆயிரம் கோடியை வாரி வழங்கியுள்ளன. ஒன்றிய  அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாயை அளித் துள்ளது குறிப்பிடத்ததக்கது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசுத்துறை பொது இன் சூரன்ஸ் ஊழியர்களும் அதிகாரி களும் தங்களது உயிரைப் பணயம் வைத்து பாலிசிதாரர்களுக்கு சிறப் பான சேவை அளித்தனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த காலகட்டத்தில் பொது மக்களுக்கு பாலிசி வழங்குவதிலும் இழப்பீடு கள் வழங்குவதிலும் பொது இன் சூரன்ஸ் ஊழியர்களின் பங்களிப்பு மகத்தானது. இத்தகு அளப்பரிய சேவையாற்றிய இன்சூரன்ஸ் ஊழி யர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை கடந்த 54 மாத காலமாக வழங்க மறுப்பது ஒன்றிய அரசினுடைய மற்றும் நிர்வாகத்தினுடைய அலட்சி யப் போக்கிற்கும் ஆணவப் போக்கிற் கும் ஓர் எடுத்துக்காட்டு. அதே போல குடும்ப ஓய்வூதிய உயர்வு என்பது வங்கி உள்ளிட்ட இதர துறைகளில் வழங்கப்பட்டு வந்தா லும் பொது இன்சூரன்ஸ் ஊழியர்களு க்கு இதுகாறும் மறுக்கப்பட்டு வந்துள்ளது என்பதே உண்மை. மேலும் எவருக்கும் பயன் தராத தேசிய பென்சன் திட்டத்தைக் கைவிட்டு பங்க ளிப்புடன் கூடிய பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்றும் பொது இன்சூரன்ஸ் ஊழி யர்கள் கோரி வருகின்றனர். மேற்சொன்ன கோரிக்கைகளை முன்வைத்து அரசுடைமை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும் அதிகாரி களும் ஜனவரி 28 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக மதுரை மேலவெளிவீதியில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் முன்பாக கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்தத்தின் நோக்கங்களை விளக்கி கூட்டுப் போராட்டக் குழுவின் தலைவர்கள் உரையாற்றினர். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுக்கோரிக்கை குறித்து ஒன்றிய நிதியமைச்சகம் உடனடியாக தலையிட்டு பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் என மதுரை மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சு.வெங்கடேசன் மற்றும்  பி. ஆர். நடராஜன் ஆகியோர்  ஒன்றிய நிதிய மைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடி யாக பேச்சு வார்த்தை துவங்குவதற்கு ஏதுவாக நிதியமைச்சகம் பொது இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உரிய உத்தரவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

;