districts

img

தேனி அருகே முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்து அரசு கையகப்படுத்திய நிலத்தில் வேலி அமைக்க எதிர்ப்பு

தேனி, மார்ச் 28- தேனி அருகே முறைகேடாக வழங்கிய   பட்டாவை ரத்து செய்து அரசு கையகப் படுத்திய நிலத்தில் வேலி அமைக்க ,நிலம்  வாங்கியவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒத்திவைக்கப்பட்டது. பெரியகுளம் வட்டம் வடவீரநாயக்கன் பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலத்தில்  ‘அ’ பதிவேட்டில் திருத்தம் செய்து, வட  புதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக  ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்  ளிட்ட சில தனிநபர்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக அப்போதையை பெரியகுளம் வட்டாட்சி யர் உள்ளிட்ட 7 பேர் தற்காலிக பணியிடை  நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கைது  செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட னர் .இது தொடர்பாக வழக்கு விசாரணை  தேனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரு கிறது. இதற்கிடையில் முறைகேடாக வழங்கப்  பட்ட பட்டாவை ரத்து செய்து ,182 ஏக்கர்  நிலத்தை  கையகப்படுத்தி அரசு தரப்பில்  அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீதிமன்றமும்  தற்போதைய நிலையை நீட்டித்து உத்தர விட்டது. வேலி அமைக்க எதிர்ப்பு  இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை காலை பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து  தலைமையில், பெரியகுளம் வட்டாட்சியர்  காதர் ஷெரீப் உள்ளிட்ட வருவாய்த்துறை யினர்  முறைகேடாக பட்டா வழங்கப்பட்டு அரசு கையகப்படுத்திய   வடபுதுப்பட்டி கிரா மம்  சர்வே எண் 1257-ல் ஏக்கர் 1.40 சென்ட்  நிலத்தை வேலி அமைக்கும் பணியில் ஈடு பட வந்தனர் .அப்போது நிலத்தை வாங்கிய  உரிமையாளர்கள் பணி செய்ய விடாமல்  தடுத்து, கோட்டாட்சியரிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை  துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட சென்றனர் .அதனைத் தொடர்ந்து வேலி அமைக்கும் பணி ஒத்தி வைக்கப்பட்டது.

;