districts

img

சிவகங்கையில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் திறப்பு

சிவகங்கை, மே 21- சிவகங்கை மாவட்டத்தில் முதன் முத லாக மகளிர் வாழ்வாதார சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட  ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலை மையில், ஊரக வளர்ச்சி- ஊராட்சித் துறை யின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத் தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையத்  தினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் பேசுகையில், தமிழகத்தின் மொத்தம் 31 மாவட்டங்களில் 120 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,994  கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல் படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, முதன் முத லாக சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கிட அறிவுறுத்தப்பட்டு, அதன்படி, இன்றைய தினம் மகளிர் வாழ்வாதார சேவை மையம் சிவகங்கையில் திறந்து வைக்கப்பட்டுள் ளது. காளையார்கோவில் வட்டாரத்தில் 43 ஊராட்சிகளிலும், மானாமதுரை வட்டா ரத்தில் 39 ஊராட்சிகளிலும் மற்றும் தேவ கோட்டை வட்டாரத்தில் 42 ஊராட்சிகளி லும் என மேற்கண்ட 3 வட்டாரங்களில் மொத்தம் 124 ஊராட்சிகளில் வாழ்ந்து  காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட வுள்ளது.  வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மேம்  பாட்டு பணிகளுக்கென ரூ.212 கோடி நிதி  முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

மேலும்,  2021-2022-ஆம் நிதியாண்டில், சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.1.39 கோடி ஒதுக்கீடு செய்ததன் வாயிலாக, 69 உற்பத்தியாளர் குழுக்கள், 10 தொழில் குழுக்கள், 23 சமு தாய திறன் பள்ளிகள், 67 சமுதாய பண்ணைப் பள்ளிகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி ஆகிய வற்றின் மூலம் 6,897 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.  இச்சேவை மையத்தில் தொழில் முனை வோரை கண்டறிதல், தொழிலை கண்டறி தல், தொழில் திட்ட அறிக்கை தயார் செய்  தல், வங்கிக்கடன் மற்றும் இணைப்பு, பிற  துறைகளில் (மாவட்ட தொழில் மையம்,  தாட்கோ, டாம்கோ, மாவட்ட பிற்படுத்  தப்பட்டோர் நலத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை. வேளாண் பொறியியல் துறை) உள்ள திட்டங்களை இணைத்தல் போன்ற தொழில் தொடங்கு வதற்கான உரிமங்கள் பெற்றுத்தருதல், அனைத்துவிதமான பதிவுகள் சார்ந்த சேவைகள் மற்றும் அனைத்துவிதமான சான்றிதழ்கள் பெற்றுத்தருதல் போன்ற  பணிகள் மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் நடைபெறும் என்று அமைச்சர் தெரி வித்தார்.

 இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார், ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் தலைவர் சேங்கைமாறன், ஊரா ட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர், லதா அண்ணாத்துரை, சிவ கங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணி, நகர்மன்ற துணைத் தலை வர், கார்கண்ணன், துணை இயக்குநர் (சுகா தாரப்பணிகள்) எஸ்.ராம்கணேஷ், ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலு வலர் ப.பரமேஸ்வரி, மாவட்ட செயல் அலு வலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) வி. பிரேம்குமார், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, செயல் அலு வலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) எம்.கனகசுந்தரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;