கொடைக்கானலில் சார்பு நீதிமன்றம் திறப்பு திண்டுக்கல், மார்ச்.14- திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சார்பு நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்தீபன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கல்யாண சுந்தரம், எம்.நிர்மல்குமார், ஆர்.என். மஞ்சுளா, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் ச.விசாகன், மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி செல்வி எம்.கே.ஜமுனா, திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலை வர் ரூபேஸ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன், கொடைக்கானல் பார் அசோசியேசன் தலைவர் ஆர்.ராஜசேகரன், செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.