வாழ்வாதார உரிமையும் வரையறுக்கப்பட்ட ஊதியமும் கேட்டு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு துவங்கிய இந்த பேரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முடிவடைந்தது. மாவட்டத் தலைவர் ராமு ,மாவட்ட செயலாளர் மணி காளை, பொருளாளர் ஜெசி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.