districts

img

2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை

நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, நாடாளுமன்றத் தொகுதி வாரியாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதனன்று துவக்கினார். கூட்டத்தின்போது, 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணத் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் அமலானதும் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது. நிர்வாகிகள் பேசும்போது, புதிதாக யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.