districts

மவுண்ட் பார்க் பள்ளி 99.5 விழுக்காடு தேர்ச்சி

கள்ளக்குறிச்சி, ஜூன் 21- கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்திலுள்ள மவுண்ட் பார்க் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.5 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளி யில் 616 பேர் தேர்வு எழுதியதில் 613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ஜான்சி ராணி தமிழில் 98, ஆங்கிலம் 94, இயற் பியல் 99, உயிரியல் 98, வேதியல், கணக்கு 100 என 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர் ராஜ்குமார் தமிழ் 98, ஆங்கி லம் 94,  இயற்பியல் மற்றும் வேதியி யல் 98 கணக்கு மற்றும் உயிரியல் 100 என 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சாய்கணேஷ், மதன மோகன் இரு வரும் 587 மதிப்பெண்கள் பெற்றுள் ளனர். மாவட்ட அளவில் அதிக பாடப்பிரி வுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளி சாதனை படைத் துள்ளது. கணக்கு 12 பேர், வேதியியல் 17 பேர், இயற்பியல் 4 பேர், உயிரியல் 2 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் 8 பேர், கம்ப்யூட் டர் அப்ளிகேஷன் 1, கணக்குப்பதிவியல் 2 பேர் என மொத்தம் 46 பேர் 100க்கு 100 மதிபெண்கள் எடுத்துள்ளனர். மேலும் 580க்கு மேல் 14 பேரும், 570க்குமேல் 32 பேரும், 560க்கு மேல் 55 பேரும், 550க்குமேல் 88 பேரும், 500க்கு மேல் 246 பேரும் மதிப்பெண் கள் எடுத்துள்ளனர். அதேபோல் மவுண்ட் பார்க் ஸ்பெ ஷல் அகாடமி பள்ளியில் தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி பெற்று 100 விழுக்காடு தேர்ச்சி அடைந்துள் ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் மணிமாறன். முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் வாழ்த்தினர்.