districts

img

ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக் கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜுலை 28- பால் பாக்கெட்டுக்கு பாஜக ஒன்றிய அரசு விதித்த ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக் கோரி பால் உற்  பத்தியார்கள் சங்கம் சார்பாக தொப்பம்பட்டியில் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மகுடீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத்தலை வர் எம்.ராமசாமி விளக்க வுரையாற்றினார். ஒன்றி யத்தலைவர் வேலுச்சாமி, செயலாளர் சின்னதுரை ஆகியோர் கலந்து கொண் டனர். பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும். தனியார் பால் கம்பெனிகள் பசும்பால் ஒரு  லிட்டர் ரூ.32 முதல் 42 வரை கொள்முதல் செய்யும் போது, ஆவின் மட்டும் ரூ. 28க்கு கொள்முதல் செய்வது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டமாகும். மாட்டுத் தீவ னங்களின் விலை கடுமை யாக உயர்ந்துள்ள நிலை யில் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த முன்வரவேண்டும் என்று  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.        (ந.நி.)