districts

img

வேர்ட்பேட் சேவையை நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

வேர்ட்பேட்(WordPad) என்பது ஒரு அடிப்படை டெக்ஸ்ட்-எடிட்டிங் செயலியாகும். இது பயனாளர்கள் வடிவமைக்கப்பட்ட உரையுடன் ஆவணங்களை உருவாக்கவும், திருத்தவும் முடியும். இதில் பிற கோப்புகளுக்கான படங்கள் மற்றும் பிற இணைப்புகளையும் இணைக்கலாம்.1995 இல் விண்டோஸ் 95 பதிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து, கணினிகளில் இது தானாகவே உள்பொறுத்தப்பட்டிருக்கும் செயலியாக வேர்ட்பேட் உள்ள நிலையில், வேர்ட்பேட் இனி புதுப்பிக்கப்படாது என்றும், விண்டோஸின் எதிர்கால புதிய பதிப்பு வெளியீட்டில் வேர்ட்பேட் நீக்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.