districts

img

குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்காதது ஏன்?

விருதுநகர், மே.31- விருதுநகர் நகராட்சியில் உள்ள  ஏராளமான பகுதிகளில் குடிநீருடன்  கழிவு நீர் கலந்து வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென நகர்மன்றக் கூட்டத்  தில் உறுப்பினர்கள் பலர் புகார் தெரி வித்தனர். விருதுநகர் நகராட்சிக் கூட்டம்  தலைவர் ஆர்.மாதவன் தலைமை யில் நடைபெற்றது. துணைத் தலை வர் தனலட்சுமி, மேலாளர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்த னர். அப்போது நடைபெற்ற விவா தம் வருமாறு : சொத்து வரியை முழுமையாக செலுத்திய வீட்டினரிடம் நடப்பு வரியை கட்டாவிட்டால் ஜப்தி செய்யப்படும் என நகராட்சி ஊழி யர்கள் நோட்டீஸ் வழங்குகின்ற னர் ஏன்?

என உறுப்பினர் முத்து ராமன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மேலாளர்,  நிலுவை பாக்கியை வசூலிப்பதற்கு வழங்கப்படும் நோட்டீசில் அந்த  வாசகம் இருக்கும். அதே வாச கங்கள் நடப்பு வரி வசூலிக்கும் நோட்டீசிலும் வந்துள்ளது. அதை சரி செய்து விடுவோம் என்றார். தனது வார்டுப் பணிக்காக  கடந்த ஆண்டு டென்டர் விடப்பட்  டது. ஆனால், ஒப்பந்தகாரருக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்  படவில்லை. இதனால், ஓராண்டு  ஆகியும் வேலை நடைபெற வில்லையென உறுப்பினர் பால் பாண்டி புகார் தெரிவித்தார். பொறியாளர் பயிற்சி முடிந்து வந்ததும் வேலை செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என தலை வர் பதில் கூறினார். கிருஷ்ணமாச்சாரி சாலையில்  உள்ள கழிவு நீரேற்று நிலையத்தில்  50 எச்.பி திறன் கொண்ட மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால், பாத்திமாநகர், ஒளவையார் தெரு, தெற்குரத வீதி ஆகிய பகுதிகளில்   பாதாளச் சாக்கடை தொட்டிகளில்  கழிவு நீர் தேங்கியுள்ளது. மேலும்,  குடிநீருடன் கழிவு நீர் கலந்து வரு கிறது. இதனால் பொது மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர் என்று  சிபிஎம் உறுப்பினர் ஜெயக்குமார் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, முத்துலட்சுமி, மாலதி, இராமலட்சுமி, சுல்தான் அலாவுதீன், சரவணன் ஆகியோர் தங்களது வார்டு பகுதிகளிலும் குடி நீருடன் கழிவு நீரும் கலந்து வரு வதாக தெரிவித்தனர்.

மண்ணை அள்ளும்  இரு ஆட்டோக்கள் எங்கே? 

அதன் பிறகு பேசிய உறுப்பினர் ஜெயக்குமார், பாதாளச் சாக் கடை தொட்டிகளில் தேங்கும் மண்ணை அள்ளுவதற்கு இரு ஆட்டோ வாகனங்கள் உள்ளன. ஆனால், அவை எங்கு உள்ளது  எனத் தெரியவில்லை. சரியாக மண்  அள்ளினால் அடைப்புகள் பெரும்பாலும் தடுக்கப்படும் என தெரிவித்தார். உரிய நடவடிக்கை மூலம் அடைப்புகள் சரி செய்யப்படும். மின் மோட்டாரை இயக்கிட நட வடிக்கை எடுக்கப்படும் என தலை வர் பதில் கூறினார். புத்தகத் திருவிழாவில் வைக்கப்பட்ட “ நான் விருதுநகரை  விரும்புகிறேன்“ பதாகையை தனி யார் மூலம் பழுது நீக்கி நகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் பதாகையில் தங்க ளது பெயரையும் வைத்துள்ளது. அவ்வாறு இருக்க ஏன்? அப்பணி யை  டென்டர் விட்டு ரூ.1லட்சம் ஒப்பந்தகாரருக்கு வழங்குவதாக தீர்மானம் வைக்க வேண்டுமென உறுப்பினர் ஆறுமுகம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தலைவர்,  ஒப்பந்தகாரர் மூலம் சரி செய்யப் பட்டு பூங்காவில் பொருத்திய பதா கையை மர்ம நபர்கள் உடைத்து விட்டனர். அதன் பிறகு, தனியார் நிறுவனம் மூலம் பதாகை சரி செய்  யப்பட்டுள்ளது என தெரிவித்தார். கத்தாளம்பட்டி தெருவில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து புகார் கூறி யும் ஏன்? நடவடிக்கை எடுக்க வில்லையென உறுப்பினர் பிருந்தா  தெரிவித்தார். உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என தலைவர் பதில் கூறி னார். இவ்வாறாக விவாதம் நடை பெற்றது.

;