districts

img

ஆலங்குளத்தில் மேதினப் பொதுக்கூட்டம்

வெம்பக்கோட்டை, மே.29- விருதுநகர் மாவடடம் வெம்பக் கோட்டை அருகே உள்ள ஆலங்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  மே தின விழா மற்றும் நிதியளிப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் முக்கு ரோட்டில் நடை பெற்ற பொதுக்கூட்டத்திற்கு பெரிய சக்கரை தலைமை வகித்தார. வட்டக்குழு உறுப்பினர் சேர்வை முன்னிலை வகித் தார். வட்டச் செயலாளர் எம்.முனியசாமி கட்சி வளர்ச்சி நிதியாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனனிடம் வழங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.குருசாமி, எம். சுந்தரபாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முத்து நன்றி கூறி னார். முன்னதாக புயல் கலைக் குழுவின ரின் தப்பாட்டத்துடன் மேதினப் பேரணி நடை பெற்றது.