இராஜபாளையம் மே 19- ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் தளவாய்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் மே தின விழா ஊர்வலம் பொதுக் கூட்டம் வியாழக்கிழமையன்று நடை பெற்றது. சிஐடியு மாவட்டத் துணைத் தலை வர் ஆர்.எம். மாரியப்பன், சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ். மருது தலைமை தாங்கினர். கட்சியின் மாவட்ட செயலாளர் கே அர்ஜுனன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ராமர் ,ஒன்றிய செயலாளர் சந்தனகுமார் ,முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.