மதுரை, ஜூன். 23- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் மீனாம்பாள்புரம் பகுதிக்குழு மாநாடு பகுதிக்குழு தலைவர் ஆர். சந்திரா தலைமையில் நடை பெற்றது. மூத்த தோழர் ராக்கம்மாள் அமைப்பு கொடியேற்றி வைத்தார் .மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் துவக்கி வைத்து பேசினார். பகுதிக்குழு செயலாளர் ஆர். லதா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயலா ளர் ஆர். சசிகலா நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு தலைவராக க.உமா, செயலாள ராக அ.பார்வதி, பொருளாளராக நவநீதம் உட்பட 11 பேர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது. சத்யா நகரில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணா புரம் காலனியில் சாலை வசதி மற்றும் சுத்தமான குடிநீர் வசதி வேண்டும்.ரேசன் கடைகளில் பொருட்கள் முறையாக சரியாக எடையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசரடி பகுதிக்குழு மாநாடு புதனன்று சொக்க லிங்கநகர் பாண்டியன் துர்க்கை மஹாலில் தோழர் எஸ்.ராஜேஸ்வரி நுழைவாயில் தோழர் எஸ். ஞானம் நினைவரங்கில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு பகுதிக்குழு தலைவர் ஜி. சுதாராணி தலைமை வகித்தார். பகுதிக்குழு உறுப்பினர் ஏ. லீலா வதி முன்னிலை வகித்தார், மூத்த தோழர் வி. ஆத்தி யம்மாள் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார். பகு திக்குழு உறுப்பினர் இ. சுப்புலட்சுமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பகுதிக்குழு உறுப்பினர் ஆர். ஜெயா வர வேற்று பேசினார், மாநிலச் செயலாளர் எஸ். கே. பொன்னுத்தாய் துவக்கி வைத்து பேசினார். பகுதிக்குழு பொறுப்பு செயலாளர் பீ. மல்லிகா வேலை அறிக்கையும், பொருளாளர் அ. அங்கையற்கண்ணி வரவு - செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாவட்ட நிர்வாகி ஆர். ப்ரீதி, இன்சூரன்ஸ் அரங்க ஜி. கலையரசி, மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட செயலாளர் பி. வீரமணி, வாலி பர் சங்க பழங்காநத்தம் பகுதிக்குழு செயலாளர் க. கௌதம் பாரதி, அரசரடி பகுதிக்குழு செயலாளர் க. செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட செயலாளர் ஆர். சசிகலா புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார். மாவட்ட நிர்வாகி ஜே. ஜெயராணி நிறைவுரையாற்றினார் பகுதிக்குழு உறுப்பினர் கே. கலை யரசி நன்றி கூறினார். பகுதிக்குழு தலைவராக வி. பானுமதி, செயலாள ராக பி.மல்லிகா, பொருளாளராக தேன்மொழி உட்பட 13 பேர் கொண்ட புதிய பகுதிக்குழு தேர்வு செய்யப் பட்டது. முதியோர், விதவை, மாற்று திறனாளிகள் உதவித் தொகை கேட்டு விண்ணப்பம் செய்துள்ள அனைவ ருக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண் டும். சொக்கலிங்க நகர், பெத்தானியாபுரம் காமராஜர் தெரு ஆகிய பகுதிகளில் நடைமேம்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும். பெத்தானியாபுரம், சொக்கலிங்க நகர், ஜானகி நகர், சம்மட்டி புரம் பகுதிகளில் தினசரி குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.