தென்காசி ,ஜூன்27 திருப்பூர் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு விசைத்தறி தொழி லாளர் சம்மேளனத்தின் மாநில மாநாட்டில் கொண்டு செல்வதற்காக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா விசைத்தறி தொழிலாளர்களின் விடிவெள்ளியாக விளங்கிய தோழர் மாடசாமி நினைவு ஜோதி ஞாயிற்றுக்கிழமை அன்று சங்கரன் கோவிலிருந்து பள்ளிபாளையத்திற்கு கிளம்பியது. ஜோதி பயணத்திற்கு சிஐடியு தென்காசி மாவட்ட விசைத்தறி தொழிலா ளர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார் .தோழர் மாடசாமி நினைவு ஜோதியை சிஐடியு மாவட்ட தலைவர் அயூப்கான் எடுத்துக் கொடுக்க அதை கைத்தறி சங்க நிர்வாகிகள் ரத்தினவேலு,லட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட செயலாளர் வேல்முருகன் சங்க நிர்வாகிகள் முருகன் மாணிக்கம் சுப்பிரமணியன் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.