districts

img

மாதர் சங்க தேனி, கம்பம் பகுதி மாநாடு

தேனி, ஜூலை 24- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் தேனி தாலுகா மாநாடு ஆர். ரெஜினா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் மாவட்டச் செயலாளர் எஸ். வெண்மணி சிறப்புரையாற் றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் இ.தர்மர் உள்ளிட்ட  தலைவர்கள் வாழ்த்திப்பேசி னர்.புதிய தலைவராக ஆர்.மாதா, செயலாளராக எம்.மஞ்சு, பொருளாளராக பி.  சரஸ்வதி, துணைத் தலைவ ராக ஆர். ரெஜினா, துணைச்  செயலாளராக பி.காளீஸ்வரி உட்பட 12 பேர் கொண்ட தாலு காக் குழு தேர்வு செய்யப் பட்டது. கம்பம்  சங்கத்தின் கம்பம் ஏரியா  மாநாடு கே. பிரதீபா தலை மையில் நடைபெற்றது. மாநாட்டினை மாவட்ட துணைச் செயலாளர் எஸ். மீனா துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.  வெண்மணி நிறைவுரையாற் றினார். ஏரியா தலைவராக சித்திரா பர்வின், செயலாள ராக கே.பிரதீபா, பொருளா ளராக பி.லட்சுமி உட்பட 13 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கே.ஆர். லெனின் வாழ்த்திப் பேசினார்.