தேனி, மே 23- சுருளி அருவியில் மரக்கிளை ஒடிந்து விழுந்து இறந்த மாணவி பெமீனா குடும்பத்திற்கு நிவாரணம் கோரி கம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பராமரிப்புக்காக என்ற பெயரில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் வனத் துறை உரிய இழப்பீடு வழங்க வேண் டும். நியாயமில்லாமல் வசூலிக்கும் கட்டணத்தை உடனே நிறுத்த வேண் டும். தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏரியா குழு உறுப்பினர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான பன்னீர் வேல் தொடக்க உரையாற்றி னார். ஏரியா குழு உறுப்பினர் வி.மோகன், காஜா மைதீன் ஆகியோர் பேசினர் பேசி னார் ஏரியா செயலாளர் தோழர் கே. ஆர்.லெனின் நிறைவு செய்து பேசினார் .ஏரி யாக்குழு உறுப்பினர் பாலகுருநாதன், வாலிபர் சங்க செயலாளர் மணியர சன் உட்பட ஏராளமான கலந்து கொண்ட னர்.