சிவகங்கை, மே 9- சிவகங்கை நேரு பஜார் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தோழர் சத்தியமூர்த்தி (85) காலமானார். அன்னாரது உடலுக்கு கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்க பூபதி, வீரபாண்டி, ஒன்றியச் செயலாளர் உலக நாதன், மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், வழக்கறிஞர் மதி, அப்பாஸ், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.