வெம்பக்கோட்டை, ஜூலை 26- வெம்பக்கோட்டை அருகே உள்ள துரைச்சாமி புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு மாரிமுத்து தலைமையேற்றார். ஒன்றிய செயலாளர் எம்.முனியசாமி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி துவக்கி வைத்து பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் கே. அர்ஜூனன் சிறப்புரையாற்றினார். மேலும் இதில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பால்சாமி, பெரிய சக்கரை, முத்து, சேர்வை, கே.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.