மதுரை, செப்.22- மதுரை மாநகராட்சியில் நடைபெறும் கூட்டங்களில் மக்களின் கோரிக்கைகள் குறித்து அஜெண்டா வைத்து விவாதித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் 96-வது வார்டு என்.விஜயா, 23-வது வார்டு டி.குமரவேல், 56-வது வார்டு வை.ஜென்னி யம்மாள் ஆகியோர் மனு அளித்துள்ளனர். மனுவில், ‘‘மதுரை மாநகராட்சி கூட்டம் மாதந்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஒன்றரை ஆண்டுகளில் 21-க்கும் மேற்பட்ட மாமன்ற கூட்டம் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு மாமன்ற கூட்டத்திலும் அஜெண்டா வைத்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான மாமன்ற கூட்டங்களில் மதுரை மாநகர மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்துகிற அஜெண்டாக்கள் இல்லை. குறிப்பாக மதுரை மாநகர் முழுவதும் பெரும்பாலான வார்டுகளில் பாதாளச் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான வார்டுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளன. 2023-2024க்கான ஒவ்வொரு வார்டுக் கும் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டு பெரும் பாலான வார்டுகளில் வேலை நடைபெறாத நிலைமை உள்ளது. இவையெல்லாம் எந்த கூட்டங்களிலும் அஜெண்டா வைத்து விவாதிக்கப்படவில்லை. ஆகையால் அடுத்து நடைபெறும் மாமன்ற கூட்டங்களில் இத்தகைய கோ ரிக்கைகளுக்காக அஜெண்டா வைத்து விவாதிக்கப்பட வேண்டுமென்றும், மாமன்ற கூட்டங்கள் நடைபெறுவதற்கு முன்பு அஜெண்டா பைலை மாமன்ற உறுப்பினர் படிப்பதற்கு பார்வைக்கு வைக்க வேண்டும். மேலும் கரிமேடு மீன் மார்க்கெட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் கடைகள் கட்டி கொடுக்க வேண்டும், தயிர் மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படு வதாக செய்திகள் வந்துள்ளது. அனைவ ருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும், மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் ஊழியர் பற்றாக் குறை அதிகமாக உள்ளது. உடனடியாக புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே வேலை பார்த்த ஊழியர்க ளுக்கு மாதம் முதல் வாரத்தில் சம்பளம் வழங்க வேண்டும். பழங்காநத்தம், செல்லூரில் முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்தில் நடை பெறக் கூடிய வேலைகளை காலத்தில் முடித்துவிட்டு புதிய சாலைகளை அமைக்க வேண்டும். மண்டலம் 2-யில் 21, 22, 23 ஆகிய வார்டு களுக்கு இரண்டு மாதமாக உதவி செயற்பொறியாளர் இல்லாத நிலைமை உள்ளது. இதனால், வார்டுகளில் பல்வேறு வேலைகள் நடைபெறாத உள்ளன. உட னடியாக புதிய உதவி செயற்பொறியா ளரை நியமிக்க வேண்டும்’’ என்று வலி யுறுத்தியுள்ளனர்.