districts

img

பொதுமக்கள் மனுக்களின் மீது காலதாமதமின்றி நடவடிக்கை

மதுரை, மே 24-  மதுரை மாநகராட்சி மேயர் வ.இந்தி ராணி தலைமையில் செவ்வாயன்று மண்டலம் எண் - 4 பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.  முகாமில் பெயர் மாற்றம், சொத்து வரி தொடர்பாக 45 மனுக்களும், பாதா ளச்சாக்கடை இணைப்பு மற்றும் அடைப்பு தொடர்பாக 2 மனுக்களும், குடிநீர் இணைப்பு மற்றும் பழுதுகள் தொடர்பாக 1 மனுவும், சாலை வசதி வேண்டி 82 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 4 மனுவும், சுகாதா ரம் தொடர்பாக 6 மனுக்களும், கடைகள் ஒதுக்கீடு வேண்டி 7 மனுக்களும், பிற  மண்டலங்கள் தொடர்பாக 4 மனுக்க ளும், பிற துறைகள் தொடர்பாக 10 மனுக்  களும் என மொத்தம் 161 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மேயர் நேரடி யாக பெற்றுக்கொண்டார்.  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றையும் கணிப் பொறியில் முறையாக பதிவு செய்து,  பெறப்பட்ட மனுக்கள் மீது காலதாமத மின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவ்வாறு பொதுமக்கள் அளிக்கும் மனுக்  களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பது டன், அதே புகார்கள் மறுபடியும் வராத வகையில் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என்று மேயர் அறிவுறுத்தி னார். இம்முகாமில் துணை மேயர் தி. நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், மண்டலத் தலைவர் முகேஷ்  சர்மா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;