districts

img

மதுரை மல்லிகை மெட்ரிகுலேஷன் பள்ளி, மல்லிகை புத்தக நிறுவனம்

மதுரை மல்லிகை மெட்ரிகுலேஷன் பள்ளி, மல்லிகை புத்தக நிறுவனம் மற்றும் மல்லிகை குழுமத்தின் நிறுவனர் மறைந்த மல்லிகை பாலச்சந்தர் அவர்கள் படத்திறப்பு நிகழ்ச்சி கே. கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்களன்று நடைபெற்றது. இதில் திமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. வேலுச்சாமி, மதிமுக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், துணை மேயர் டி. நாகராஜன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் ,தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் என். கணேசன் மூர்த்தி, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மல்லிகை பாலச்சந்தரின் மகன் பா. திலீபன் சக்கரவர்த்தி மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.