districts

img

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சிக்கு குவிந்த பாராட்டுகள்

மதுரை, ஜூன் 17- மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு 164 நூல் தொகுப்புகள் கொண்ட  13 ஆயிரம் நூல்களை வெள்ளியன்று  மதுரை நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை தலை மைச் செயலகத்தில் இருந்து போட்டி  தேர்வு நூல்களை மதுரை நூலகங்க ளுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன்  தலை மையில் வழங்கினார். இந்த நிகழ்வு குறித்து மதுரை மாநகராட்சி வளாகத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்கள் கூறியதாவது:- மதுரை பழங்காநத்தம் பகுதி யிலிருந்து வந்து படிக்கும் மாணவர் கே.பாலா, நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளேன் குரூப்-4 தேர்வுக்குப் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி நூல்களை மதுரையிலுள்ள நூலகங்களுக்கு வழங்கி உள்ளது வரவேற்கத் தக்கது எங்களைப் போன்ற மாண வர்களுக்கு மற்றும் கிராமப்புறங்க ளில் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அவருக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள் என்றார். அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற மாண வர் கூறுகையில், மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் தமது தொகுதி மாணவர்களுக்குச் செய்தது போல மற்ற மக்கள் பிரதிநிதிகளும் இது போன்று முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும் அனைத்து பகு திகளிலும் இதுபோல் இருந்தால் போட்டித் தேர்வு மாணவர்கள் வெளி யூர் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என்றார்.

மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவர் கூறுகையில் மாநகராட்சி வளாகத் தில் மாணவர்கள் அமர்ந்து படிப்பது சிரமமாக உள்ளது.   மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் வெங்கடேசன்  முயற்சி மிகவும் பயனுள்ளதாக  இருக்கும் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு நல்ல ஏற்பாடு என்றார்.  பெண் ஒருவர் கூறுகையில் அரசு வேலைக்குத் தயாராகும் மாண வர்களில் பலர் வறுமைக் கோட்டுக் குக் கீழ் உள்ளவர்கள். அதிக வசதி உள்ளவர்கள் வெளியில் உள்ள  பயிற்சி மையங்களில் படிக்கிறார் கள். எங்களைப் போன்ற மாணவர்க ளுக்கு இந்த நூல்கள்  பயனுள்ளதாக இருக்கும். எந்த மாதிரியான நூல்கள் உள்ளது என்று தெரியவில்லை. இருந்தாலும் மதுரை  மக்களவை உறுப்பினரின்  முயற்சிக்குப்  பாராட்டுகள் என்றார். ஜெ.பொன்மாறன்