districts

img

மக்களை சந்தித்து மனுக்களை பெற்ற சு .வெங்கடேசன் எம்.பி.,

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறுகின்ற திட்டப் பணிகளை 3 ஆம் நாள் சுற்று பயணமாக  மே 23 செவ்வாயன்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். மீனாட்சிபுரத்தில் துவங்கி மாங்குளம், சின்னமாங்குளம் (கைலாசபுரம்), குருத்தூர், மாத்தூர், காதக்கிணறு,  யா.புதுப்பட்டி, அரும்பனூர், கொடிகுளம், ஆகிய ஊர்களில் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டார்.