மதுரை, ஜூலை 9- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை களுக்கான சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட 4 ஆவது மாநாடு செல்லூர் கண்ணையா முத்தம்மாள் மஹாலில் மாவட்டத் தலை வர் டி. நாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் பா.பழனி யம்மாள், பி.மனோகரன் ஆகி யோர் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட பொருளா ளர் வி.மாரியப்பன் அமைப் பின் கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்டச் செய லாளர் பி.வீரமணி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட் டக்குழு உறுப்பினர் அ. பால முருகன் வரவேற்றுப் பேசி னார், மாநிலச் செயலாளர் டி. வில்சன் துவக்கி வைத்து பேசினார். மாநகராட்சி மேயர் வ.இந்திராணி, தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் மு. பூமி நாதன், அம்பேத்கார் கல்வி மையம் ஒருங்கிணைப்பா ளர் பரவை பாலு, காப்பீட்டு கழக ஊழியர் சங்க மதுரை கோட்ட நிர்வாகி மகாலிங் கம், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.சுப்பையா ஆகி யோர் வாழ்த்திப்பேசினர். மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் நிறைவுரை யாற்றினார். மாநாட்டில் தலைவர்கள் பேசியதை எமி மாள், எஸ்தர் ஆகியோர சைகை மொழி பெயர்ப்பு செய்தார்கள்.
மாநாட்டில் மாவட்டத் தலைவராக பி. வீரமணி, செயலாளராக அ.பாலமுரு கன், பொருளாளராக வி. மாரியப்பன் உள்ளிட்ட 20 மாவட்டக்குழு உறுப்பினர் கள் மற்றும் மாவட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். மாற்றுத் திறனாளிகளுக் கான மாதாந்திர உதவித் தொகையை அரசு ரூ .3 ஆயி ரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடுமையான பாதிப்பு உள்ள மாற்றுத் திற னாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் முகாமை -2 மாதத் திற்கு ஒருமுறை நடத்திட வேண்டும். மாற்றுத் திற னாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண் டும். மதுரை காமராஜர் பல்க லைக் கழகத்தில் பணியாற் றிய மாற்றுத் திறனாளியான ராமு வேலைநீக்கம் செய்யப் பட்டு, மன உளைச்சலால் மர ணமடைந்தார். அவரது குடும் பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு பொதுக்கூட் டம் ஞாயிறன்று மாலை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் நடைபெற உள்ளது.