districts

img

கொரோனா இல்லா புத்தாண்டு: யோகாசனம் செய்த மதுரை சகோதரர்கள்

மதுரை, டிச.31- கொரோனா - ஒமைக் ரான் இல்லா புத்தாண்டை வரவேற்கும் விதமாக மதுரைச் சேர்ந்த சகோத ரர்கள் யோகாசனம் செய்து அசத்தினர். மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் அசாருதீன்- சல்மான் சகோ தரர்கள். இவர்கள் யோகா கலையில் பல்வேறு சாத னைகளை புரிந்துள்ளனர். மேலும், இப்பகுதியில் சிறிய அளவில் பள்ளி சிறுவர்கள்-சிறுமியர்களுக்கு தற்காப்பு கலைகளான சிலம்பம் உள்ளிட்ட கலைகளுடன் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள யோகா பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோயி லிருந்து பொதுமக்களை பாதுகாக்க சமூக இடை வெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்தி கொள்ளு தல் ஆகியவற்றை விளக்கும் விதமாகவும், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கொரோ னா படம் வரைந்தும் இந்தியா வரைபடத்தை பூவினால் வரைந்தும், ஐஸ் கட்டியில் அமர்ந்து பூர்ணசலபாசனம், நடராசனம், விருச்சிகாசனம், பூர்ண தனுராசனம், ஏகாபத சீர்சாசனம், ராஜ கபோடா சனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். மேலும் தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக யோகா, சிலம்ப மாணவர்க ளுக்கு சுற்று சூழலை பாது காக்கும் விதமாக உறுதி மொழி எடுத்து நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.