districts

மதுரை முக்கிய செய்திகள்

ஒரேநாளில்  4,824 பேர் பாதிப்பு

சென்னை, ஜன.5- தமிழக அரசின் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், புதனன்று 4,824 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை குறிப்பாக மதுரையில் செவ்வா யன்று 119 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தனர். புதனன்று 52 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏழு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பட்டாசு விபத்தில் உயிரிழப்பு; காயம் சிஐடியு ஆறுதல்

விருதுநகர், ஜன.6- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிபட்டி கிராமத்தில் விஜய குலத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவ ரது சோலை பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் புதனன்று நிகழ்ந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் குடும்பத்தினரை பட்டாசு தீப்பெட்டி தொழி லாளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டப் பொருளாளர் எம்.சி.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாத்தூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.சரோஜா, ஒன்றியகுழு உறுப்பினர் மனோஜ்குமார் ஆகியோர் சந்தித்து ஆறு தல் கூறினர்.

சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு

தேனி, ஜன.5- தேனி மாவட்டம் போடி அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகள் 16 வயது சிறுமி. இவ ருக்கும் இதே ஊரைச் சேர்ந்த பொன்ராம் மகன் மணிவேல் என்பவருக்கும் திரு மணம் நடைபெற்றதாக வந்த தகவலை யடுத்து தேனி மாவட்ட சமூக நல அலு வலரும், குழந்தை திருமண தடுப்பு அலு வலருமான ராஜராஜேஸ்வரி விசா ரணை நடத்தினார்.  இதில் 16 வயது சிறுமியை மணிவேல் என்பவர் கடந்த 2019 ஆம் வருடம் திரு மணம் செய்து குடும்பம் நடத்தி வருவ தாகவும், இதற்கு இவர்களது பெற்றோர் உடந்தையாக இருந்ததாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்வரி போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், போடி அனைத்து மகளிர் காவல் துறையினர், சிறுமியை திருமணம் செய்த மணி வேல், திருமணம் செய்து வைத்த மணி வேலின் பெற்றோர் பொன்ராம், முத்து ஜக்கம்மாள், சிறுமியின் பெற்றோர் தர்மராஜ், இந்துராணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

இளம்பெண்ணிடம் நகை பறிப்பு 

தேனி, ஜன.5- தேனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணிடம், பின்னால் வாகனத்தில் வந்த இருவர் நகையை பறித்து சென்றனர். தேனி அருகே தர்மாபுரி மேற்கு தெரு வைச் சேர்ந்த பிரபு மனைவி முத்துச் செல்வி (26). இவர் வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டி ருந்தார். எஸ்பிஎஸ் காலனி அருகே வந்த போது பின்னால் இருசக்கர வாக னத்தில் வந்த இருவர், முத்துச்செல்வி அணிந்திருந்த தங்க பட்டை ஜெயினை அறுத்து கொண்டு தலைமறைவாகி விட்டனர்.  இது தொடர்பாக முத்துச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

ஒமைக்ரானுக்கு ஒருவர் பலி

உதைப்பூர், (இராஜஸ்தான்), ஜன.5- இராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற் றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயதான நபர் சிகிச்சை பல னின்றி புதனன்று உயிரிழந்தார். அந்த நபர் கொரோனாவுக்கு பிந்தைய நிமோனியா மற்றும் சர்க்கரை வியாதி, ஹைப்பர்-டென்ஷன் மற்றும் ஹைப்போ-தைராய்டிசம் உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டி ருந்தார் என்று  மருத்துவமனை வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின் அவருக்கு 25-ஆம் தேதி நடந்த பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரியவந்தது.

இயற்கை ரப்பர் விலை உயர்வு: குமரி விவசாயிகளுக்கு ஆறுதல்

நாகர்கோவில், ஜன. 4- கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விலை கிலோ ரூ.166.50 ஆக அதிகரித்தது விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை தீவிரம் அடைந்த நிலை யில் லாட்டக்ஸ் கொண்டு தயார் செய்யப்படு கின்ற கை உறைகள் போன்ற வற்றுக்கு சந்தையில் மவுசு மற் றும் தேவை அதிகரித்தது. அத னால் லாட்டக்ஸ் விலை உயர்ந் துள்ளது ஷீட் உற்பத்தியை விட லாட்டக்ஸ் உற்பத்தி எளிதானது ஆகும். இதனால் ரப்பர் உற் பத்தியாளர்கள் ரப்பர் ஷீட் தயார் செய்வதைக் குறைத்து லாட் டக்ஸ் தயார் செய்வதில் ஆர்வம் காட்ட தொடங்கினர். இதனால் ரப்பர் ஷீட் தட்டுப் பாடு ஏற்பட தொடங்கியது. மேலும் கண்டெய்னர்கள் கிடைக்க தாமதம் ஏற்பட்ட கார ணங்களினால் ரப்பர் இறக்குமதி யும் குறைந்தது. கப்பல் நிறு வனங்கள் இறக்குமதிக்கான செலவை அதிகரித்ததும் ரப்பர் இறக்குமதி குறைய காரணமாக கூறப்படுகிறது. இதனால் டயர் கம்பெனிகள் உள்நாட்டு சந்தை யில் ரப்பர் கொள்முதல் செய்ய தொடங்கினர். இந்த நிலையில் ஒருவாரம் முன்பு ரப்பர் விலை மீண்டும் சரிவை சந்தித்தது. இதில் கிலோ ரூ.162 ஆக சரிந்தது. ஆனால் தற்போது மீண்டும் ரப்பர் விலை ஏறுமுகம் ஆகியுள்ளது. திங்க ளன்று ரப்பர் விலை கிலோ ரூ. 166.50 ஆக உயர்ந்தது. மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே வேளையில் ஒமிக்ரான் பரவல் காரணமாக ரப்பர் விலை சரியவும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழக உறுப்பினர்களை சந்திக்க மறுக்கும் அமித்ஷா மாநிலத்தின் உரிமையை அவமதிக்கும் செயல்: சு.வெங்டேசன் எம்.பி

புதுதில்லி, ஜன.6- நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழக ஆளுநர் தான் பொறுப்பு. எனவே, அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மா னத்தை ஆளுநர் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வில்லை என்றும் கூறியுள்ளார்.  நீட் தேர்வு விவகாரம் தொடர் பாக தமிழகத்தின் திமுக, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதி முக சிபிஐ, விடுதலைச் சிறுத்தை கள் உள்ளிட்ட  அனைத்து கட்சி எம்,பி.க்கள் நேரில் வலியுறுத்து வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தில்லி சென்றனர். இந்தநிலையில், எட்டு நாட்களாக தில்லியில் முகா மிட்டு இருந்தும் அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை.  தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்களை, அரசியல் காரண மாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுப்பதாக நினைக்கிறேன் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.  மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் இது தொடர் பாக புதனன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிட்டிருந்த ட்விட் டர் பதிவில், “நீட் தொடர்பான தமி ழக சட்டமன்ற தீர்மானத்துக்கு ஆளுநர் கையெழுத்திட மறுப் பது தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்திக்க ஏழு நாட்க ளாக அனைத்து கட்சி எம் பிக்கள் காத்திருக்கிறோம். நேரம் ஒதுக் கப்படவில்லை. நீங்கள் அவம திப்பது எங்களையல்ல, எமது மாணவர்களின் நலனையும், எமது மாநிலத்தின் உரிமையை யும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக எம்.பி.க்கள் மீண்டும் உள்துறை அமைச்சகத்தில் மனு அளித்த னர்.

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கவில்லை  கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

மதுரை, ஜன.5- மதுரை அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் வழங்கப்படாததை கண்டித்து கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள இரும்பாடி, கருப்பட்டி சுற்றுவட்டார பகுதியிலுள்ள அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்துள்ளனர்.  விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லுக்கான ரசீது வழங்கப்பட்ட நிலையில், அதற்கான முழுமையான பணம் வழங்காமல் விவசாயிகளிடமிருந்து தலா ரூ.3 ஆயிரம் வரை மோசடி செய்யப்பட்டதாக தொடர்ந்து புகார் எழுந்தன. இந்நிலையில், நெல் மூட்டைகளுக்கான பணத்தை முறையாக வழங்கக் கோரி சோழவந்தான் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.  பின்னர் கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் அரசின் நெல்கொள்முதல் நிலைய முறைகேட்டால் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக விவசாயிகள் கண்ணீர் விட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.